பாக்ஸ் ஆபிஸ்-சில் அதிரடி காட்டும் மலையாள சினிமா – அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை இந்த ஆண்டே முந்திய 3 மலையாள படங்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமா ரசிகர்களை சற்று சிந்திக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்கள் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை அஜித் குமார் நடித்த “குட் பேட் அக்லி” பெற்றிருந்தாலும், மலையாள சினிமா அதனை முந்தி சாதனை படைத்து வருகிறது. உலகளவில் சுமார் 247 கோடி ரூபாய் வரை வசூல் செய்த குட் பேட் அக்லி படத்தை, வெறும் ஒரே ஆண்டில் மூன்று மலையாள படங்கள் பின்தள்ளிவிட்டன என்பது பெரிய அதிர்ச்சியாக கருதப்படுகிறது.

ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படம் மட்டும் தான் இந்த ஆண்டு தென்னிந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருந்த நிலையில், வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் “காந்தாரா சாப்டர் 1” அந்த சாதனையையும் முறியடிக்க வாய்ப்பு அதிகம் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

மலையாளத்தில், பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் நடித்த “எம்புரான்” படம் 265 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதன்பின், தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால்–ஷோபனா நடித்த “தொடரும்” திரைப்படம் 250 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேபோல், துல்கர் சல்மான் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் நடித்த “லோகா சாப்டர் 1: சந்திரா” வெறும் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் 250 கோடி வசூல் செய்து, ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் உள்ளடக்க வளமான படங்களை உருவாக்கியும், உலகளவில் ரசிகர்களை கவர்ந்தும் மலையாள சினிமா முன்னேறி வரும் நிலையில், தமிழ் திரையுலகுக்கு இது பெரிய “ரெட் அலர்ட்” என சொல்லப்படுகிறது. சம்பள விவகாரங்களில் மட்டும் சிக்கிக்கொள்ளாமல், கதைக்கும், படத்தின் தரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

எனினும், அடுத்த ஆண்டில் தமிழ் சினிமா கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் மார்க்கெட்டில் கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Malayalam cinema is doing great at the box office 3 Malayalam films that surpassed Ajith Good Bad Ugly this year


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->