ராஷ்மிகா முதல் காதல் கதை மீண்டும் வைரல்: மூத்த நடிகருடன் காதல்; நின்றுபோன ராஷ்மிகாவின் முதல் திருமணம் பற்றி தெரியுமா?
Rashmika first love story goes viral again Love with a veteran actor
பான் இந்தியா அளவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா, விரைவில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரது முதல் காதல் குறித்து சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா, தனது ஆரம்ப காலத்தில் எதிர்கொண்ட காதல் அனுபவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான ராஷ்மிகா, அதே படத்தில் நடித்த நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் காதலில் இருந்தார்.
2016 டிசம்பர் 30ஆம் தேதி ‘கிரிக் பார்ட்டி’ வெளியானது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, 2017 ஜூலை 3ஆம் தேதி ராஷ்மிகா – ரக்ஷித் ஷெட்டி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது ராஷ்மிகாவுக்கு 20 வயது மட்டுமே. ரக்ஷித் ஷெட்டி அவரைவிட 13 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரு குடும்பங்களின் சம்மதத்துடன் நடந்த இந்த நிச்சயதார்த்தம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆனால், திருமணத்திற்கு முன்பே இந்த உறவு முறிந்தது. 2018 செப்டம்பர் மாதம் இருவரும் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. கருத்து வேறுபாடுகள் மற்றும் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.
நிச்சயதார்த்தம் முறிந்த பிறகு, ராஷ்மிகா தனது சினிமா பயணத்தில் முழுமையாக கவனம் செலுத்தினார். ‘கீதா கோவிந்தம்’, ‘புஷ்பா’, ‘சீதா ராமம்’, ‘அனிமல்’ போன்ற படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றார். மறுபுறம் ரக்ஷித் ஷெட்டியும் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்தார்.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படும் செய்தி பரவி வரும் நிலையில், ராஷ்மிகாவின் முதல் காதல் கதை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. கடந்த கால முடிவுகள் தான் தனது வாழ்க்கை மற்றும் தொழில் பயணத்தை மாற்றியதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எனினும், திருமணம் தொடர்பான தகவல்களுக்கு இரு தரப்பினரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rashmika first love story goes viral again Love with a veteran actor