வாய்ப்பு தரும்போது ஃபாலோயர்ஸ் பார்க்கிறார்கள்! திறமையை விட 'ஃபாலோயர்ஸ்' தான் முக்கியமா? – நடிகர் ஷா ரா வேதனை!
When given an opportunity followers are watching Are followers more important than talent Actor Shah Rukh anguish
யூடியூப் தளத்தின் மூலம் பிரபலமான நடிகர் ஷா ரா (சிவ சரவணன்), சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகி உள்ளார். அதிகாலை நேரத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அவரது மனம் உருக்கும் வீடியோ பதிவு ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘கோவில் குரங்குகள்’ யூடியூப் சேனல் மூலம் அறிமுகமான ஷா ரா, பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு ‘மீசையை முறுக்கு’, ‘கோமாளி’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘ஓ மை கடவுளே’, ‘டிக்கிலோனா’, ‘வாத்தி’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
குறிப்பாக ‘கோமாளி’ படத்தில் அவந்திகாவின் கணவராக நடித்த அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தனித்துவமான பேச்சு நடை மற்றும் இயல்பான நகைச்சுவை அவருக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கியது.
இந்த நிலையில், அதிகாலை 4 மணியளவில் தூக்கம் வராமல் இருந்தபோது பதிவு செய்த வீடியோவில், தற்போதைய திரையுலக சூழலை குறித்து ஷா ரா மனம் திறந்து பேசியுள்ளார். “பட வாய்ப்பு கொடுக்கும்போது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ்களை கணக்கில் எடுக்கிறார்கள். அதைப் பொறுத்துதான் சம்பளம் பேசப்படுகிறது. எனக்கு ஃபாலோயர்கள் அதிகரிக்க ஏதாவது ஐடியா சொல்லுங்கள்,” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், “எனக்கு கிளாமர் இல்லை. நீளமான முடி இல்லை, முகம் மொழுமொழுப்பாக இல்லை. தாடி இருக்கிறது, அதுவும் நரைத்த தாடி. ரீல்ஸ் செய்ய விருப்பம் இல்லை. என்ன செய்தால் ஃபாலோயர்கள் அதிகரிப்பார்கள் என தெரியவில்லை,” என்று மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பல ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், “திறமையை விட ஃபாலோயர் எண்ணிக்கையை வைத்து மதிப்பிடுவது வருத்தமானது” என்று கருத்து தெரிவித்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பலரும் அவரது பதிவுக்கு லைக்குகள் மற்றும் ஊக்கமளிக்கும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
திரையுலகில் திறமைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய சூழலில், சமூக வலைதள தாக்கம் ஒரு அளவுகோலாக மாறி வருவது குறித்து இந்த பதிவு மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
When given an opportunity followers are watching Are followers more important than talent Actor Shah Rukh anguish