இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்? - டிரம்ப் புது விளக்கம்!
Why did India impose higher taxes? Trumps new explanation
இந்தியாவுடன் சிறந்த நட்பு இருந்தபோதும் அதிக வரி விதித்தது ஏன்? என்று புது விளக்கம் ஒன்று டிரம்ப் கொடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் இங்கிலாந்து சென்றிருந்தார். பின்னர் பிரதமர் கெயிர் ஸ்டார்மருடரருடன் வர்த்தக தலைவர்களுடனான சந்திப்பு ஒன்றில் பங்கேற்றனர்.
பின்னர் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். அப்போது ரஷியா-உக்ரைன் போர், ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளும் இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றன.
பேச்சுவார்த்தைக்குப்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போதுஇரு நாடுகளுக்கு இடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தையும் புகழ்ந்துரைத்தார்.
தொடர்ந்து இந்த பேட்டியின்போது, இந்தியா மீது அதிக வரி விதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டிரம்ப் பதிலளிக்கும்போது கூறியதாவது:-அது மிகவும் எளிமையானது. எண்ணெய் விலை குறைந்தால் புதின் பின்வாங்குவார். அவருக்கு வேறு வாய்ப்பு இருக்காது. அந்த போரை அவர் நிறுத்துவார். இந்திய பிரதமருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். நேற்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தும் கூறினேன். நாங்கள் சிறந்த உறவை பேணி வருகிறோம்.
ஆனாலும் நான் அவர்களுக்கு வரி விதித்தேன். சீனாவும் அமெரிக்காவுக்கு அதிக வரி செலுத்துகிறது. இந்தியா, சீனா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காகவே நான் அவர்களை எதிர்க்கிறேன். வரி விதிக்கிறேன். உக்ரைன் போர் தொடர்பாக சில நல்ல செய்திகள் வரும் என நம்புகிறேன்.இவ்வாறு டிரம்ப் கூறினார்.
English Summary
Why did India impose higher taxes? Trumps new explanation