பண மோசடி வழக்கில் பிக்பாஸ் புகழ் தினேஷ்கைது செய்யப்பட்டாரா?நடந்தது என்ன? வெளிவந்த உண்மை!
Was Bigg Boss fame Dinesh arrested in a money laundering case What happened The truth has come out
பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளரும், சீரியல் நடிகருமான தினேஷ் கோபால்சாமி மீது பண மோசடி புகார் எழுந்தது பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஆனால், தற்போது தினேஷ் நேரடியாக வீடியோ வெளியிட்டு அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி பணகுடியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர், “என் மகளுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2022 டிசம்பரில் தினேஷ் ரூ.3 லட்சம் பெற்றார். வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினார். பணம் கேட்டபோது என் மைத்துனரை தினேஷ் தாக்கினார்” என்று போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில் பணகுடி போலீசார் தினேஷை விசாரணைக்காக அழைத்துச் சென்றதை, “நடிகர் தினேஷ் கைது” என சில ஊடகங்கள் கூறி பரப்பியது.
இந்நிலையில், தினேஷ் தனது விளக்கத்தில்,“என்னை கைது செய்ததாக வரும் செய்திகள் முழுக்க வதந்தி. போலீசார் விசாரணைக்காக மட்டுமே அழைத்தார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை கொடுத்தேன். இது என்னை குறைகூற திட்டமிட்ட ஒரு பொய் வழக்கு” என்று தெரிவித்துள்ளார்.
சீரியல் உலகில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் தினேஷ், சமீபத்தில் பிக்பாஸ் 7 மூலம் மீண்டும் அதிக வரவேற்பைப் பெற்றார். தற்போது அவருக்கும் அவரது மனைவி ரட்சிதாவுக்கும் இடையேயான விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தினேஷ் தன்னை கைது செய்யவில்லை என்று தெளிவாக தெரிவித்ததால், இந்த சர்ச்சை தற்காலிகமாக அடங்கும் நிலையில் உள்ளது.
English Summary
Was Bigg Boss fame Dinesh arrested in a money laundering case What happened The truth has come out