என்னை காலி செய்ய காசு குடுத்து என்னை ட்ரோல் பன்றாங்க! புது குண்டை தூக்கிப்போட்ட நடிகை பிரியங்கா மோகன்
They paid me to leave and trolled me Actress Priyanka Mohan drops a new bombshel
தமிழ் சினிமாவில் தனக்கு எதிராக ஒருகாலத்தில் வெறுப்பு பிரச்சாரம் நடைபெற்றதாக நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
‘டான்’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் நடிகை பிரியங்கா மோகன். தற்போது அளித்துள்ள ஒரு நேர்காணலில் தனது திரையுலக அனுபவங்களைப் பற்றி பேசும்போது, கடந்த காலத்தில் தன்னை குறிவைத்து பல விமர்சனங்களும் ட்ரோல்களும் நடந்ததாக அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “எனக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் நடந்தது. இப்போது சமூக வலைதளங்களில் யாரையும் ட்ரோல் செய்வது சாதாரண விஷயமாகிவிட்டது. பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் கூட அதிலிருந்து தப்பிக்கவில்லை. என் விஷயத்திலும் அப்படிப்பட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அந்த கடந்த காலத்திற்கு மீண்டும் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை,” என்றார்.
அதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், “அந்த அனுபவங்கள் என்னை ஒரு நல்ல மனிதராக மாற்ற உதவின. அதிலிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். சினிமா துறை மிகவும் நிச்சயமற்ற தன்மை கொண்டது. இங்கு யாருக்கும் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். ஆனால் கடினமான காலங்கள் நம்மை மேலும் வலிமையாக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் பவன் கல்யாணுடன் ‘ஓஜி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த ‘பிரதர்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் தற்போது நடிகர் கவினுக்கு ஜோடியாக ஒரு புதிய தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். மேலும், ரஜினிகாந்த் நடிக்க உள்ள ‘தலைவர் 173’ திரைப்படத்திலும் பிரியங்கா மோகன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
They paid me to leave and trolled me Actress Priyanka Mohan drops a new bombshel