‘ஜனநாயகன்’ பட தணிக்கை மீண்டும் தாமதம்: தணிக்கை வாரியம் கொடுத்த பேரிடி... ரிலீஸுக்கு வந்த புது சிக்கல்..! - Seithipunal
Seithipunal


இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை செயல்முறை மீண்டும் தாமதமானது. இதனால் படத்தின் வெளியீடு குறித்து புதிய குழப்பம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை இன்று தணிக்கை திருத்தக் குழு (CBFC Revising Committee) பார்வையிட திட்டமிடப்பட்டிருந்தது. மதியம் 2 மணிக்குள் படம் திரையிடப்படும் என முன்பே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த திரையிடல் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருத்தக் குழுவில் உள்ள ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று நடைபெற இருந்த தணிக்கை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. திருத்தக் குழு மீண்டும் எப்போது படத்தை பார்வையிடும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

முன்னதாக ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாக தணிக்கை வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சினையால், படக்குழு சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. ஆனால் நீண்ட காலம் வழக்கு நீளும் வாய்ப்பு இருப்பதால், தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தணிக்கை வாரியத்திற்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றது.

நீதிமன்ற வழக்கை தொடர்ந்தால் வெளியீட்டில் மேலும் தாமதம் ஏற்படும் என்பதால், படத்தை நேரடியாக திருத்தக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்ததாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால் விசாரணை தொடங்கவே குறைந்தபட்சம் 20 நாட்கள் ஆகும். அதற்குப் பிறகு தணிக்கை வாரியத்திற்கு கூடுதல் அவகாசமும் வழங்கப்படலாம் என்பதால், படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் மாதிரி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். அப்படி நடந்தால் படத்தின் வெளியீடு மேலும் தாமதமாகி, தேர்தலுக்குப் பிறகு மே அல்லது அதற்குப் பிந்தைய மாதங்களுக்கு தள்ளிப் போகும் சூழலும் உருவாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ‘ஜனநாயகன்’ திரைப்படம் எப்போது தணிக்கை அனுமதி பெற்று திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jananayakan film censorship delayed again The censor board's disaster A new problem has come to the release


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->