“அப்பாவின் பெயரை பயன்படுத்தாத பையன்!”விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பற்றி விக்ராந்த் பகிர்ந்த தகவல் வைரல்!
Vikrant information about Vijay son Jason Sanjay goes viral
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறித்து அவரது சித்தப்பாவும் நடிகருமான விக்ராந்த் அளித்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் தனது மகனை சினிமாவில் ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசை ஒருபோதும் காட்டவில்லை என்றும், “மகனின் விருப்பமே என் விருப்பம்” என்ற நிலைப்பாட்டில் இருந்தார் என்றும் விக்ராந்த் தெரிவித்துள்ளார்.
பள்ளிப் பருவத்திலேயே ஜேசனை ஹீரோவாக அறிமுகப்படுத்த பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டியிருந்தாலும், ஜேசனுக்கு நடிப்பு மீது விருப்பமில்லை என்றும், இயக்குனராகவே படத்துறைக்கு வர வேண்டும் என்ற எண்ணம் சிறுவயது முதல் இருந்ததையும் விக்ராந்த் கூறியுள்ளார்.
மேலும், ஜேசன் சஞ்சய் தன் தந்தையின் பெயரை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை, “வாழ்க்கையில் என்னால் நான் நிலைபெற வேண்டும்” என்ற மனப்பாங்கு அவரை பல மடங்கு உயர்த்துகிறது என்றும் புகழ்ந்துள்ளார்.
தற்போது ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான “சிக்மா” படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ளார். லைகா தயாரிப்பில், தமன் இசையமைத்த இந்த படம் 2025 கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
இப்போது எழும் கேள்வி ஒன்று —இயக்குனராக தொடங்கிய ஜேசன் சஞ்சய், எதிர்காலத்தில் தந்தை இடத்தை நிரப்ப ஹீரோவாக மாறுவாரா?இதை காலமே முடிவுசெய்யும்.
English Summary
Vikrant information about Vijay son Jason Sanjay goes viral