ஓட்டலில் சாப்பிட்ட இளைஞருக்கு பாம்பு கடி…! பாம்புடன் நேரடியாக மருத்துவமனைக்குள் நுழைந்ததால் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கோவூர் புறநகர் பகுதியில், ஒரு வினோதமும் அதிர்ச்சியும் கலந்த சம்பவம் நேற்று மதியம் நடந்தது.அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அருகிலுள்ள ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டலுக்குள் நுழைந்த நல்ல பாம்பு திடீரென அவரைக் கடித்தது. அதிர்ச்சியடைந்தாலும் தைரியம் இழக்காத அவர், உடனடியாக பாம்பைப் பிடித்து அடித்து கொன்றார்.

இதற்குப் பிறகு, இறந்த பாம்பை கையில் எடுத்தபடியே சிகிச்சைக்காக நேரடியாக கோவூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

பாம்புடன் மருத்துவமனைக்குள் வந்த அவரைக் கண்ட மருத்துவ ஊழியர்களும், நோயாளிகளும் பயந்து அங்கிருந்து பதற்றமாக வெளியேறினர்.

அதன் பின்னர், பாம்பு ஏற்கனவே இறந்துவிட்டதாக அவர் விளக்கியதும், மருத்துவர்கள் அவருக்கு அவசர சிகிச்சை அளித்தனர்.

இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவரை நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young man who ate restaurant bitten by snake There stir he entered hospital directly snake


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->