காவி நிற உடையில் வந்த பிரியா வாரியர்! "காவி நிற ஆடை ஏன்?" செய்தியாளர் கேள்விக்கு பிரியா வாரியர் கொடுத்த பதில்! - Seithipunal
Seithipunal


ஒரே ஒரு கண் சிமிட்டலால் நாடு முழுவதும் பிரபலமான நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதில் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

'ஒரு அதார் லவ்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'மாணிக்ய மலரய பூவி' பாடலின் மூலம் "விங்க் கேர்ள்" என்ற அடையாளத்தை பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர், அதன் பிறகு மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், தற்போது பல புதிய படங்களில் பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் ஆரஞ்சு நிற கவுன் அணிந்து பிரியா பிரகாஷ் வாரியர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர் ஒருவர், "நீங்கள் ஏன் காவி நிற ஆடை அணிந்துள்ளீர்கள்? அதற்கு ஏதேனும் சிறப்பு காரணம் இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார்.

எதிர்பாராத இந்த கேள்வியால் சில நொடிகள் அமைதியாக இருந்த பிரியா, பின்னர் மிகவும் நிதானமாக பதிலளித்தார்.

"இதற்கு எந்த சிறப்பு காரணமும் இல்லை. நிகழ்ச்சியின் பிராண்ட் தீமுக்கு ஏற்ற வகையில்தான் இந்த உடையைத் தேர்வு செய்தேன். நான் எல்லா நிறங்களிலும் ஆடைகளை அணிவேன்" என்று அவர் விளக்கம் அளித்தார்.

பிரியா பிரகாஷ் வாரியரின் இந்த பதில் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. எதிர்பாராத கேள்விக்கு எந்த சர்ச்சையும் உருவாகாத வகையில் அமைதியாகவும் தெளிவாகவும் அவர் பதிலளித்த விதத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Priya Varrier appeared in a saffron-colored outfit Here is her reply to a reporter who asked Why the saffron outfit


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->