இன்று விசாரணைக்கு வரும் முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு..!
The divorce case of Chief Minister Vijay and Sangeetha couple will come up for hearing today
தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதை அடுத்து, விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம், இருவரையும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம் இருவரும் ஆஜராகாததால், குறித்த வழக்கை ஜூன் 15-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைத்தது.

அன்றும் இருவரும் ஆஜராகாவில்லை. இந்நிலையில், தற்போது விஜய் தமிழக முதல்வராகியுள்ளார். அத்துடன் ஏற்கனவே அவர் திரைபிரபலமானவர். விஜய்யின் மனைவி என்பதால் சங்கீதாவும் பிரபலமாணவர். இதனால் காணொளி காட்சி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டுமென இருதரப்பு வழக்கறிஞர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இருவரும் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்கும் வகையில் இணையதள முகவரி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
English Summary
The divorce case of Chief Minister Vijay and Sangeetha couple will come up for hearing today