சூறாவளி நெருங்குது! ராமேசுவரம்–பாம்பன் கடலோரம் ‘ரெட் அலர்ட்’ நிலை - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவாகியுள்ள பலத்த சூறைக்காற்று எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீன்வளத்துறையின் உத்தரவின்படி ராமேசுவரம்–மண்டபம் பகுதிகளில் டோக்கன் வழங்கல் முற்றிலும் நிறுத்தப்பட்டது.கடந்த இரண்டு நாட்களாக ராமநாதபுரம் முழுவதும் இடையிடையே சாரல் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், தடை காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு அமைதியாக நிறுத்தப்பட்டுள்ளன.

நாட்டுப்படகு மீனவர்களும் இன்று கடலுக்குப் போகவில்லை.திடீர் மீன்பிடி தடையால் ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன் தொழிலை சார்ந்தவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கமாக கூட்டம் களைகட்டும் ராமேசுவரம், பாம்பன் துறைமுகங்கள் இன்று வெறிச்சோடித் தோன்றின.காலை முதல் ராமேசுவரம்–ராமநாதபுரம் கடலோரங்களில் பலத்த காற்று அடித்தபடி, தனுஷ்கோடி அருகே கடல் வழக்கத்தை விட அதிகமாக கொந்தளித்தது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்குவதை போலீசார் தடை செய்து கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் பகுதிகளில் கடல் பரபரப்பாக அலைமோதும் காட்சி அச்சத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cyclone approaching Red alert on Rameswaram Pampanga coast


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->