லெஜண்ட் சரவணன் - துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவான ‘லீடர்’ ரிலீஸ் தேதி வெளியீடு...!
Release Date Announced Leader Collaboration Between Legend Saravanan and Durai Senthilkumar
லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்துள்ள இரண்டாவது படம் ‘லீடர்’. இந்தத் திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது தணிக்கை உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் லெஜண்ட் சரவணனுடன் பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா, ஷாம், லால் மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை லெஜண்ட் சரவணனே பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்.
மேலும் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு மிகப்பெரிய அளவில் விளம்பரப் பணிகளை மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த 'லீடர்’ படத்தைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தையும் துரை செந்தில்குமாரே இயக்கவுள்ளார்.
ஏப்ரல் 9-ம் தேதி படம் வெளியான பிறகு, புதிய படத்தின் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Release Date Announced Leader Collaboration Between Legend Saravanan and Durai Senthilkumar