நாவல் முதல் நடப்பு வரை ! – ‘விலாயத் புத்தா’வுடன் பிருத்விராஜின் புதிய அதிரடி பயணம்! - ட்ரைலர் வெளியானது
From novel to present day Prithvirajs new action packed journey with Vilayath Buddha Trailer released
மலையாளத் திரையுலகின் முன்னணி முகமாக திகழும் பிருத்விராஜ் நடித்த ‘விலாயத் புத்தா’ படத்தின் பிரமாண்ட ட்ரெய்லர் வெளியானது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.
ஜெயன் நம்பியார் இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசை அமைத்து தன் சவுண்ட் மேஜிக்கை வெளிப்படுத்தியுள்ளார். ஷமி திலகன், அனு மோகன், சூரஜ் வெஞ்சாரமூடு, டீஜே அருணாச்சலம், டி.எஸ்.கே உள்ளிட்ட பலர் கதையை தாங்கிச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

மலையாள எழுத்தாளர் ஜி.ஆர். இந்துகோபன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைக்கதை, புஷ்பா பாணியை நினைவூட்டும் சந்தனக்கட்டை கடத்தல் உலகத்தை மையமாக வைத்து அதிரடி–திரில்லர் கலந்த காட்சிகளுடன் நகர்கிறது.
முன்னதாக பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை வெற்றிகரமாக படமாக்கி நடித்திருந்த பிருத்விராஜ், மீண்டும் ஒரு நாவலை தழுவிய படத்தில் நடிப்பதால், ‘விலாயத் புத்தா’ குறித்து எதிர்பார்ப்பு வானளாவியுள்ளது.
English Summary
From novel to present day Prithvirajs new action packed journey with Vilayath Buddha Trailer released