20,000 வேலை வாய்ப்புகள் கைதப்பியது! - தமிழகத்தின் அலட்சியத்தைக் குற்றம்சாட்டும் அண்ணாமலை பதிவால் சர்ச்சை...!
20000 job opportunities lost Annamalais post accusing Tamil Nadu negligence sparks controversy
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.அதில் அவர் தெரிவித்ததாவது,“தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் தொழில் துறை அமைச்சரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் வேளையில், அவர்கள் பெருமையாக வெளியிட்ட முதலீட்டு அறிவிப்புகள் அண்டை மாநிலங்களின் பக்கம் ஒன்று கொடுத்து ஒன்று இடம்பெயர்கின்றன.

தென் கொரியாவின் ஹுவாசுயங் (Hwaseung) நிறுவனம் ரூ.1,720 கோடி முதலீட்டில் 20,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மிகப்பெரிய தோலற்ற காலணித் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க ஒப்புக்கொண்டதாக தொழில் துறை அமைச்சர் கூறியிருந்தார்.
ஆனால் வெறும் மூன்று மாதங்களிலேயே அந்த முதலீட்டை ஆந்திரப் பிரதேசத்திற்கு மாற்ற நிறுவனம் முடிவு செய்திருப்பது அதிர்ச்சியூட்டுகிறது.பிற மாநிலங்கள் உலக உற்பத்தி மையங்களை இழுத்துக் கொள்ள மின்னல் வேகத்தில் செயல்படும் நிலையில், தமிழகத்தில் அலட்சியம், நிர்வாக தளர்ச்சி மற்றும் திட்டமிடல் குறைபாடுகள் காரணமாக முதலீடுகள் நழுவிக் கொண்டிருக்கின்றன.
ஒருகாலத்தில் ‘வாய்ப்புகளின் நிலம்’ எனப் போற்றப்பட்ட தமிழ்நாடு, திமுக ஆட்சியில் ‘வாய்ப்புகளை இழக்கும் நிலமாக’ மாறியுள்ளது".இவ்வாறு அண்ணாமலை தனது பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
English Summary
20000 job opportunities lost Annamalais post accusing Tamil Nadu negligence sparks controversy