Breaking News: உடல்நலக்குறைவால் நடிகர் ரோபோ சங்கர் காலமானார்..!
Actor Robo Shankar passes away due to ill health
நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 46. உடல்நலக் குறைவால் நேற்று காலை சென்னையில் உள்ள பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரபல தொலைகாட்கியின் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பிரபலமானவர், அடுத்தடுத்து கிடைத்த சினிமா வாய்ப்புகள் மூலம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க காமெடியன்களில் ஒருவராக வளர்ந்து வந்தார்.
மிமிக்ரியில் தொடங்கிய இவருடை சினிமா பயணம் பிறகு சினிமாவில் நடிக்கத் வாய்ப்பு கொடுத்தது. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி' திரைப்படம் இவருக்கு ப்ரேக் தந்தது பெரிய வாய்ப்புகளை தேடி தந்தது.

அப்படத்தைத் தொடர்ந்து ரோபோ சங்கர் உச்ச நட்சத்திரங்கள் பலருடைய திரைப்படங்களில் நடிக்கத்த தொடங்கினார். இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக 'லயன் கிங்' படத்திற்கு கொடுத்த பின்னணி குரலும் பல குழந்தைகள் முதல் பெரியவர் வரை கவர்ந்தது.
அத்துடன், சன் டி.வி-யில் ஒளிபரப்பாகி வந்த 'டாப் குக் டூப் குக்' நிகழ்ச்சியிலும் போட்டியாளராக இவர் பங்கேற்றிருந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு இவருக்கு மஞ்சக்காமாலை நோய் ஏற்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து இவருடைய உடல் எடை பெருமளவு குறைந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது கெளதம் வாசுதேவன், தர்சன் நடிக்கும் கோட்ஸில்லா படத்தின் படப்பிடிப்பின் இவர் கலந்துகொண்டுள்ளனர். அப்போது நீர்ச்சத்து குறைப்பது, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிறுநீரகம் உள்ளிட்ட பாதிப்பு உள்ளிட்ட காரணிகளால் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திரை பிரபலங்கள், தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Actor Robo Shankar passes away due to ill health