ஈரான் தலைநகர் தெஹ்ரானில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்; இந்தியா அறிவிப்பு..!
India announces that most of the Indian students stranded in Tehran have been moved to a safe place
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடிக்கும் கொடுக்கும் விதமாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதால் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் ஈரான் தலைநகர் தெஹ்ரான் அதிகமாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
தெஹ்ரானில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 09 ஆயிரம் மாணவர்கள் படித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற சரியான எண்ணிக்கை தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த மாணவர்களை இந்திய தூதரகம் தெஹ்ரானில் இருந்து வேறு இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கான போக்குவரத்து, உணவு தங்கும் வசதி உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதே நேரம் மிகவும் குறைந்த அளவிலான மாணவர்களே மட்டுமே தூதரக வாய்ப்பை பயன்பெற முடியாமல் உள்ளனர் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
அத்துடன், ஈரானில் உள்ள மற்ற மாணவர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே அறிவித்த பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ள நிலையில், முடிந்த அளவிற்கு அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜன்னல் அருகே இருப்பதை கூட அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள இந்தியர்கள் எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாக இருக்கவும், போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், மற்றும் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
India announces that most of the Indian students stranded in Tehran have been moved to a safe place