'தேர்தல் முடிவு நாளில் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்'; தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்..!
The Tamil Nadu State Commission for Protection of Child Rights advises parents to take special care of their children on the day of the election results
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக கடந்த 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தேர்வு முடிவுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வரும் 04- ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இன்றைய நாளில் குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், அனைத்து குழந்தைகளும் தேர்தல் முடிவுகளை எதிர்ப்பார்ப்பது இல்லை என்றும், சில குழந்தைகள் தவறான முடிவை கையாளும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இம்முறை தேர்தல் களத்தில் குழந்தைகள் சட்டவிரோதமான முறையில் தூண்டப்பட்டிருக்கிறார்கள் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளதோடு, குழந்தைகளை மனரீதியாக தூண்டி தேர்தல் பிரச்சாரம் நடந்ததாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தேர்தல் முடிவு நாளில், 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை வீட்டில் கவனமாக பார்த்துக்கொள்ளும் படி கேட்டுக்கொண்டுள்ளனர். ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக இருந்திட பெற்றோர்களே கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
The Tamil Nadu State Commission for Protection of Child Rights advises parents to take special care of their children on the day of the election results