விரைவில் விண்ணில் பாயும் 'அக்னி-6' (Agni-VI) ஏவுகணை; முழுமையாகத் தயார் நிலையில் DRDO..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பாதுகாப்புத் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், 'அக்னி-6' (Agni-VI) ஏவுகணைத் திட்டத்திற்குத் முழுமையாகத் தயாராக இருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் டெல்லியில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் டிஆர்டிஓ தலைவர் சமீர் வி. காமத் பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது;

இந்த அக்னி-6 ஏவுகணைத் திட்டத்தைத் தொடங்குவதற்கான தொழில்நுட்பம் தயார் நிலையில் உள்ளதக் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டம் குறித்த இறுதி முடிவு மத்திய அரசின் கொள்கை முடிவைப் பொறுத்தது என்றும், அரசாங்கம் அனுமதி வழங்கியவுடன் இதற்கான பணிகள் உடனடியாகத் தொடங்கும் என்றும் சமீர் வி. காமத் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதாவது, தற்போதுள்ள அக்னி வரிசை ஏவுகணைகளை விட, அக்னி-6 நீண்ட தூரம் சென்று இலக்கைத் தாக்கக்கூடிய மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டதாக இந்த ஏவுகணை அமையும். ஒலியை விட பல மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய 'ஹைப்பர்சோனிக் கிளைடு' மற்றும் 'ஹைப்பர்சோனிக் குரூஸ்' ஆகிய இரண்டு வகை ஏவுகணைகளையும் இந்தியா உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் 'ஹைப்பர்சோனிக் கிளைடு' ரக ஏவுகணைகள் மேம்பட்ட நிலையில் இருப்பதாகவும், இதற்கான முதற்கட்ட சோதனைகள் மிக விரைவில் நடத்தப்படும் என்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மேலும் கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DRDO Fully Prepared for the Agni VI Missile Project


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->