'மனசு தாங்கல'...! நேபாளம் பெருவெள்ளத்தில் 157 பேர் பலி...37 தமிழர்கள் மாயம்...! - சோகத்தில் மூழ்கிய சிம்புவின் உருக்கமான பதிவு...!
157 people died Nepal...37 Tamils missing Simbu heartfelt post in grief
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள், சாலைகள், பாலங்கள் என பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 37 சுற்றுலா பயணிகளின் நிலை தெரியாததால், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் வடக்கே ரசுவா மாவட்டம் அமைந்துள்ளது.

ரசுவாகடி பகுதியில் லெண்டே கோலா உள்ளிட்ட ஆறுகள் ஒன்றிணைந்து போடேகோஷி ஆறாக பாய்கின்றன.போடேகோஷி ஆற்றில் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கண நேரத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், ரசுவா மற்றும் அருகிலுள்ள நுவாகோட் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.ஆற்றின் இருபுறங்களிலும் அமைந்திருந்த ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த பேரழிவில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.வெள்ளத்தில் சிக்கிய 93 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவலின்படி, வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் சுமார் 750 சுற்றுலா பயணிகளை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் 133 பேர் இந்தியர்கள்.
தமிழகத்தை சேர்ந்த 57 சுற்றுலா பயணிகளில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 37 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் பலத்த சேதமடைந்துள்ளதால், மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மாயமானவர்களை கண்டறிந்து மீட்கும் வகையில் தேடுதல் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவு குறித்து நடிகர் சிம்பு தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் பேரழிவு காட்சிகள் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாகவும், தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இன்னும் மீட்புக்காக காத்திருப்பவர்களுக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் மனவலிமைக்காக பிரார்த்திப்பதாகவும் சிம்பு தெரிவித்துள்ளார்.
English Summary
157 people died Nepal...37 Tamils missing Simbu heartfelt post in grief