பெண் காவல் ஊழியரை காரில் துரத்தி காதல் தொல்லை...! - பள்ளிப்பட்டு காவல் நிலைய ஊழியர் அதிரடி கைது...!
police officer chased by female police officer car and subjected love harassment police officer from Pallipattu police station arrested major action
காவல் நிலையத்தில் கணினி பணியில் ஈடுபட்டு வரும் 25 வயது இளம்பெண்ணை தொடர்ந்து பின்தொடர்ந்து காதலிக்குமாறு தொல்லை கொடுத்ததாக கூறப்படும் கணினி பணியாளர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரில் சென்று வழிமறித்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண், திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கைகளை கணினியில் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதேபோல், பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் கணினி இயக்குபவராக பணியாற்றி வரும் திருத்தணியை சேர்ந்த ராம்குமார் (32), அந்த இளம்பெண்ணுக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.தனக்கு அவரை காதலிக்கும் விருப்பம் இல்லை என்பதை அந்த பெண் பலமுறை தெளிவுபடுத்தியபோதும், ராம்குமார் தொடர்ந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்த இளம்பெண் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அவர் கூட்டத்திற்கு செல்வதை அறிந்த ராம்குமார், காரில் அவரை பின்தொடர்ந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் அந்த பெண்ணை வழிமறித்த அவர், தன்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்கிருந்து தப்பிச் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத்திடம் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் பள்ளிப்பட்டு காவலர்கள் ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ராம்குமாரின் தந்தை காவல் துறையில் பணியாற்றியபோது உயிரிழந்ததை தொடர்ந்து, கருணை அடிப்படையில் ராம்குமாருக்கு கணினி இயக்குபவர் பணி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
police officer chased by female police officer car and subjected love harassment police officer from Pallipattu police station arrested major action