விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் த.வெ.க...? - தூத்துக்குடியில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், “இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்” என்ற வாசகங்களுடன் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, அக்கட்சியினர் விஜய்யை அடுத்த பிரதமராக முன்னிறுத்தி வருவது கூட்டணி கட்சிகளிடையேயும் கவனத்தை ஈர்த்துள்ளது.த.வெ.க. ஆட்சி அமைத்த பிறகு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரபலங்கள் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இதற்கிடையே, த.வெ.க.வினர் தங்கள் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில், “அடுத்த பிரதமர் விஜய்” என்ற கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.த.வெ.க.வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரிடையே இந்த முழக்கம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், த.வெ.க.வினர் இன்னும் ரசிகர் மன்ற மனநிலையிலிருந்து அரசியல் கட்சி செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று விமர்சித்துள்ளார். மேலும், ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதில் தங்கள் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் முதல்-அமைச்சர் விஜய்யை வாழ்த்தி புதிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.அந்த போஸ்டர்களில், அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த சுதாகரின் புகைப்படத்துடன், “இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

மேலும், “தூத்துக்குடி மத்திய மாவட்ட த.வெ.க.” என்ற பெயரும் அந்த போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.த.வெ.க. கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் பேசப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK put forward Vijay Prime Ministerial candidate sensational poster pasted Tuticorin


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->