38 ஆயிரம் சிகப்பு நிற குடும்ப அட்டைகள் ரத்து; புதுச்சேரி சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்..!
Minister informs Puducherry Assembly that 38000 red family cards will be cancelled
சமூகத்தில் வறுமையில் வசிக்கும் மக்களுக்கு சற்று கூடுதலான சலுகைகள் வழங்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளால் சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்படுகிறது.
அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பொருளாதார வசதி கொண்ட பலர் இந்த சிவப்பு நிற ரேஷன் அட்டை பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
அதேநேரம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு மஞ்சள் நிற குடும்ப அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், ஏழை நிலையில் உள்ள பலர் அரசின் உதவியைப் பெற முடியாமல் சிரமம் அடைந்து வருவதாகவும் பல தரப்பினர் தொடர்ந்து புகார் கொடுத்து வந்தனர்.
இவ்வாறு புகார்கள் அதிகம் வந்துள்ள நிலையில், புதுச்சேரி அரசின் சார்பில், குறைகளைக் களைய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அந்தவகையில், மத்திய அரசின் இலவச அரிசிக்கு பதிலாக பணம் அளிக்கும் மாற்றத்தினால் 38,000 சிகப்பு நிற குடும்ப அட்டை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளை அழைத்து பேசிய பேரவையின் சபாநாயகர் அன்பழகன் இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு, இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், மேலும் இது தொடர்பாக விளக்கமான பதில் நாளை தெரிவிப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து தகவல் வெளியிட்டுள்ளார்.
English Summary
Minister informs Puducherry Assembly that 38000 red family cards will be cancelled