மிரட்ட வரும் மிஷ்கின்... ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்...! - எதிர்பார்ப்பை எகிற வைத்த படத்தின் டைட்டில் வெளியீடு...! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் ஏ. எல். விஜய் இயக்கிய “இது என்ன மாயம்” திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன் பின்னர் விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, அறிமுக இயக்குனர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்துள்ளார். நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு வித்தியாசமான கதை அமைப்பில் உருவாகும் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ்- மிஷ்கின் இணையும் இந்த புதிய படத்தின் முதல் பார்வை தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, “சத்தியவான் சாவித்திரி” என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் இரண்டாம் பார்வை விளம்பரப் படம் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mysskin coming threaten Keerthy Suresh joining cast title film that raised expectations


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->