ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணுவை கரம்பிடிக்கும் நடிகை மிருணாளினி ரவி; 07 வருட நட்பு காதலாகிய தருணம்..!
Actress Mrinalini Ravi hugs spiritual speaker Maha Vishnu
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மிருணாளினி ரவி. இவர் டிக் டாக் செயலியில் மூலம் இணையத்தில் பிரபலமானவர். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'சாம்பியன்' படத்தில் நடித்தார்.
அதனை தொடர்ந்து, ஆர்யா - விஷால் நடிப்பில் வெளியான 'எனிமி' படத்தில் நடித்திருந்தார். 'எம்ஜிஆர் மகன்', 'ஜாங்கோ' படங்களில் நடித்தவர், விக்ரம் நடிப்பில் வெளியான 'கோப்ரா' படத்தில் நடித்தார். அதன் பிறகு தெலுங்கில் 'மாயா மச்சிந்த்ரா' படத்தில் நடித்தார்.
கடைசியாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக 'ரோமியோ' படத்தில் நடித்தார். இந்தப் படம் கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு மிருணாளினி நடிப்பில் எந்தப் படங்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பிரபல ஆன்மீக பேச்சாளரான மகா விஷ்ணுவை தனது காதலர் என அறிமுகப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''உங்களை காதலிக்க தொடங்கும்போது, என்னை நானே காதலிப்பது போல உணர்ந்தேன்.
ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும், நான் எப்போதும் உன்னையே தேர்ந்தெடுப்பேன்.'' என பதிவிட்டுள்ளார்.
அதற்கு ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''திருமணத்தில் இல்லை தவறு, புரிதல் இல்லாத திருமணம்தான் தவறு. நம்பிக்கை ஊற்றெடுத்ததால் இரு மனம், ஒரு மனமாய், திருமணம் நிச்சயமானதே. 07 ஆண்டுகள் நட்பு காதலாக மாறி வாழ்க்கையானது. சர்வதேச தோழிகள் தினத்தை முன்னிட்டு மிருணாளினி ரவி என் வாழ்வில் புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்''என பதிவிட்டு அவர்களது காதலை உறுதிப்படுத்தியுள்ளார்.
English Summary
Actress Mrinalini Ravi hugs spiritual speaker Maha Vishnu