CWG 2026: குத்துச்சண்டை பிரிவில் தங்க வென்றுள்ள இந்தியாவின் சாக்ஷி சவுத்ரி மற்றும் பிரியா கங்காஸ்..!
Indias Sakshi and Priya win gold in boxing at CWG 2026
ஸ்கொட்லாந்து நாட்டில் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி சவுத்ரி மற்றும் பிரியா கங்காஸ் தங்கம் வென்று அசத்தியுள்ளனர். இதுவரை இந்த தொடரில் நான்கு தங்கங்களை இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று (சனிக்கிழமை) இரவு 09 மணி அளவில் நடைபெற்ற 51 கிலோ எடைப்பிரிவுக்கான மகளிர் குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ரூபி ஒயிட் உடன் சாக்ஷி மோதினார். 5-0 என்ற கணக்கில் ரூபியை வீழ்த்தி சாக்ஷி தங்கம் வென்றார்.

அடுத்ததாக, 60 கிலோ எடைப்பிரிவுக்கான மகளிர் குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் கனடாவின் மேரி பத்தூல் அல்-அஹ்மதியா உடன் இந்திய வீராங்கனை பிரியா போட்டியிட்டார். இதில் 4-1 என்ற கணக்கில் மேரி பத்தூல் அல்-அஹ்மதியாவை வீழ்த்தி பிரியா தங்கக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
English Summary
Indias Sakshi and Priya win gold in boxing at CWG 2026