சம்பவம் செய்ய வருவாரா ‘ஜனநாயகன்’...? - ரிலீஸ் தேதி குறித்து கசிந்த சுவாரசியத் தகவல்...! - Seithipunal
Seithipunal


தவெக தலைவர் மற்றும் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஜனநாயகன்’. இயக்குனர் ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை உருவாக்கியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இப்படம், ராணுவம் மற்றும் மத நல்லிணக்கம் தொடர்பான சில காட்சிகள் காரணமாக தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் தடைகளை சந்தித்தது.

இதனால் படம் மறுஆய்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்த குழு இதுவரை சான்றிதழ் வழங்காத நிலை நீடித்து வந்தது.இதற்கிடையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு விரைவில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.மேலும், தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகும் காலத்தைத் தொடர்ந்து, மே 7-ஆம் தேதி இப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், ‘ஜனநாயகன்’ மே 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் வாய்ப்பு அதிகம் என்றும், படம் எப்போது வெளியானாலும் ரசிகர்களின் உற்சாக வரவேற்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will Jananayakan come incident Interesting information leaked about release date


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->