சென்னை துறைமுகம் தவெக வேட்பாளர் விவகாரம்! 'பாதுகாப்பு கொடுத்தாச்சு'...! - நீதிமன்றத்தில் காவலர்கள் அதிரடி அறிக்கை...!
Chennai Port Tvk candidate issue He provided security Police report court
அமைச்சர் சேகர்பாபுவை சார்ந்த கொலை மிரட்டல் குறித்த விவகாரத்தில், துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக்கிற்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை துறைமுகம் தொகுதியை சேர்ந்த தவெக வேட்பாளர் சினோரா அசோக் தாக்கல் செய்த மனுவில், வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 23-ஆம் தேதி அமைச்சர் சேகர்பாபு தனது ஆதரவாளர்களுடன் தன்னை தாக்கியதாகவும், மேலும் வாக்கு எண்ணிக்கை நாளிலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சம் நிலவுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தனது உயிருக்கு அபாயம் இருப்பதாகவும், தேர்தல் தோல்வி அச்சத்தால் வாக்கு எண்ணிக்கை நாளில் தாக்குதல் நடத்த திட்டமிடப்படுகின்றது எனவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்திருந்தாலும், ஒரே ஒருவரை மட்டும் பாதுகாப்புக்கு நியமித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், அமைச்சர் சேகர்பாபுவின் தரப்பில் இருந்து கடுமையான அச்சுறுத்தல் இருப்பதால், தனது இல்லத்திற்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எம். நிர்மல் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, காவலர்கள் தரப்பில் சினோரா அசோக்கிற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்து உத்தரவிட்டார்.
English Summary
Chennai Port Tvk candidate issue He provided security Police report court