அரசியல், சினிமா பணிகளுக்கு நடுவே சோகம்...! கடுமையான தோள்பட்டை நோயால் அவதிப்படும் 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண்...!
Tragedy amidst political and cinematic work Power Star Pawan Kalyan suffers from serious shoulder ailment
ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், இரு தோள்களிலும் ஏற்பட்டுள்ள கடுமையான தசைநார் சேதம் மற்றும் தசை காயங்களால் கடுமையான உடல் அசௌகரியத்தை எதிர்கொண்டு வருகிறார். தொடர்ந்து நீடித்த தோள்பட்டை வலி மற்றும் கை அசைவில் ஏற்பட்ட சிரமம் காரணமாக அவர் விரிவான மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டார்.

இதையடுத்து, தனது மனைவி அன்னா கொனிடேலாவுடன் மும்பையில் உள்ள பிரபல கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு பவன் கல்யாண் நேற்று சென்றார். அங்கு நவீன மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் இரு தோள்பட்டைகளும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன.
மருத்துவ பரிசோதனை முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தோள்பட்டையின் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ரோட்டேட்டர் கஃப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், அதைச் சுற்றிய தசை அமைப்புகளிலும் தீவிர சேதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்த பாதிப்பு மேலும் மோசமடையும் அபாயம் இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ குழு வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த முக்கிய நிர்வாக மற்றும் அலுவல் நிகழ்ச்சிகள் இருப்பதால், அவற்றை முதலில் நிறைவு செய்த பின்னரே அறுவை சிகிச்சைக்கு உட்பட முடிவு செய்துள்ளதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் வெளியாகியதையடுத்து அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவலை அதிகரித்துள்ளது. பவன் கல்யாண் விரைவில் முழுமையாக குணமடைந்து வழக்கமான பணிகளுக்கு திரும்ப வேண்டும் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Tragedy amidst political and cinematic work Power Star Pawan Kalyan suffers from serious shoulder ailment