'ஒல்லிபிச்சான்' எனச் சொன்னார்கள்; ஆனால், சட்டையைக் கழற்றி சிக்ஸ் பேக் உடன் நின்றதும்..? 'கர' Pre Release நிகழ்வில் தனுஷ்..! - Seithipunal
Seithipunal


தனுஷ், நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள படம் 'கர'. இப்படத்தில், மமிதா பைஜூ, ஜெயராம், கருணாஸ் எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படம் நாளை (ஏப்ரல் 30-ஆம் தேதி) இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின்  Pre Release நிகழ்வு கோவையில் நடைபெற்றது. அதில், தனுஷிடம் உங்களுக்கு போட்டி நடிகர் யார் எனக் கேட்கப்பட்டதற்கு; ''நம்ம எப்போதுமே தனி ரூட்டில் போய்க் கொண்டிருக்கிறோம். யார் ரூட்டுக்கும் நாம் போவதில்லை. என்னைக்குமே நான் நேற்று இருந்த வெர்ஷனைதான், இன்றைக்கு இருக்கும் எனக்கு போட்டியாக நினைக்கிறேன். நேற்றைவிட இன்று சிறப்பாக நடிக்க வேண்டும், நேற்றைவிட  பெரிய வசூல் கொடுக்க வேண்டும், நேற்றைவிட பெரிதாக சாதிக்க வேண்டும் என என்றைக்குமே நான் என்னைதான் போட்டியாக வைத்துக் கொள்வேன். குதிரைக்கு கடிவாளம் போட்டது மாதிரி நேராக மட்டும் பார்த்துச் செல்வேன்" என்று பதிலளித்துள்ளார்.

அடுத்ததாக அடுத்த படம் எப்போது இயக்குவீர்கள் எனக் கேட்கபட்டது. அதற்கு, ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும், அதன் பிறகு மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க வேண்டும். இதற்கு இடையில் தமிழரசன் பச்சமுத்து படத்தையும் முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 'வடசென்னை 2' படத்தை முடிக்க வேண்டும். இதை எல்லாம் முடிக்க ஒரு சில வருடங்கள் எனக்கு தேவை. அதுவரை படம் இயக்குவது பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக்கி தனுஷின் 'பொல்லாதவன்' படம் பற்றிய நினைவுகள் குறித்து கேட்கப்பட்டது. அப்போது ''பொல்லாதவன் என் வாழ்க்கையின் மிக முக்கியமான படம். அதுவரைக்கும் 'ஒல்லிபிச்சான்' எனச் சொல்லுவார்கள். அந்தப் படத்தில் சட்டையைக் கழற்றி சிக்ஸ் பேக் உடன் நின்றதும், முதன் முறையாக என்னுடைய உடலுக்கு அவ்வளவு கைதட்டல்கள் கிடைத்தது. அதை மறக்கவே மாட்டேன்" என்று தனுஷ் தனது கடந்த கால நினைவுகளை பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

They called me Skinny Dhanush at the Kara movie pre release event


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->