நட்புக்கு இலக்கணம்...தயாரிப்பாளர் தேனப்பனுக்கு தங்கச் சங்கிலி அணிவித்த சூப்பர் ஸ்டார்...! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் காலத்தைக் கடந்து கொண்டாடப்படும் மறக்க முடியாத மாபெரும் படைப்பாக திகழ்கிறது படையப்பா. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்த திரைப்படம், 1999ஆம் ஆண்டு வெளியானதும் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

ரஜினிகாந்தின் சினிமா பயணத்தில் மைல்கல்லாக மின்னும் படைப்பாகவும் இது உயர்ந்தது.இந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ரசிகர்களுக்கு விருந்தாகவும், ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

மறுவெளியீட்டிலும் ‘படையப்பா’ அதே உற்சாகத்துடன் ரசிகர்களை கவர்ந்து, திரையரங்குகளில் கொண்டாட்ட வெள்ளத்தை ஏற்படுத்தியது. காலம் கடந்தும் தனது செல்வாக்கை இழக்காத இந்த படம், ரசிகர்களின் மனதில் இன்னும் அரசாட்சி நடத்தி வருகிறது.

இந்த அபார வரவேற்பால் மகிழ்ச்சியடைந்த ரஜினிகாந்த், அப்போது படத்தின் இயக்குநர், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் தேனப்பன் ஆகியோரை நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

தற்போது, தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விதமாக, தயாரிப்பாளர் தேனப்பனை மீண்டும் அழைத்து, அவருக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Friendship grammar superstar who gifted producer Thenappan gold chain


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->