தமிழகத்தில் கடும் வெயில்; முற்றிலும் வறண்ட போயுள்ள 1,351 ஏரிகள்..! - Seithipunal
Seithipunal


கோடை காலம் தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயில் தகிப்பதன் காரணமாக தமிழகத்தில் தற்போதுவரை சுமார் 1,351 ஏரிகள் முற்றிலும் வறண்டுள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மேலும் பல ஏரிகள் வறண்டு போக கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் 14,141 ஏரிகள் உள்ளன. இவற்றின் மூலம் பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது நிலவும் கடும் வெயில் காரணமாக மாநிலம் முழுவதுமுள்ள சுமார் 1,351 ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு போயுள்ளது.

இவ்வாறு வறண்டுபோறியுள்ள 1,351 ஏரிகளில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்தில் 380 ஏரிகள் அதிகபட்சமாக உள்ளன. அடுத்ததாக, மதுரையில் 264 ஏரிகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 129 ஏரிகளும், திருநெல்வேலி மாவட்டத்தில் 84 ஏரிகளும், திருச்சியில் 82 ஏரிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 53 ஏரிகளும், தேனியில் 50 ஏரிகளும், சேலத்தில் 42 ஏரிகளும் வறண்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அத்துடன், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சில முக்கிய ஏரிகளும் வெயிலின் தாக்கம் காரணமாக நீர் வற்றி வறண்டு வருவதால் பல மாவட்டங்களில் பாசனம், குடிநீர் உள்ளட்ட தேவைகளை பூர்த்தி செய்வதில் இனி சிக்கல் எழக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், பல ஏரிகள் வறண்டதால் கால்நடைகளுக்குத் தேவையான தீவனம் மற்றும் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை குடிநீர் வழங்கலுக்குப் போதிய நீர் இருப்பு இருந்தாலும், வீராணம் போன்ற ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

1351 lakes in Tamil Nadu have completely dried up due to severe heat


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->