தமிழகத்தையே தலைகுனிய வைத்த திமுக அரசு - பாஜக நயினார் கடும் கண்டனம்!
DMK Actions vs Rhetoric Annamalai Slams Tiruvallur Councillor Harassment Case
பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக நிர்வாகியின் பாலியல் இச்சைக்கு இரண்டு வயது மழலை பலியான பெருந்துயரத்தின் சுவடு மறையும் முன்னரே, சென்னையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் இருந்த பணிப் பெண்ணிடம், திமுக கவுன்சிலர் பிரபாகரன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.
பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக மட்டுமே பார்க்கும் ஒரு கேவலமான மனநிலை திமுகவினருக்கு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. தமிழகப் பெண்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள எந்தப் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கும் உடன்பிறப்புகளைத் முக ஸ்டாலின் அவர்கள் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது ஏன்?
அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி, மாணவர்களின் எதிர்காலம் சிதைவு எனத் தொடர் நிர்வாகத் தோல்விகளால் தமிழக மக்களையே தினந்தினம் ஆட்டிப்படைக்கும் “திராவிட மாடல்” தமிழக வரலாற்றின் அவமான அடையாளம்" என தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக நிர்வாகிகளின் அடுக்கடுக்கான அநாகரிகச் செயல்களைப் பட்டியலிட்டு, அக்கட்சியின் தேர்தல் முழக்கங்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நீளும் பெயர்ப் பட்டியல்:
ஏற்கனவே பல்வேறு புகார்களில் சிக்கிய ஞானசேகரன், பெரியநாயகம், பிரவீன், ஏகாம்பரம், கண்ணன், கதிரேசன், ஹரிஹரன், ஜூனைத், கவிதாசன், பக்கிரிசாமி, காளியப்பன், முத்துசாமி போன்ற நிர்வாகிகளின் வரிசையில் இப்போது பிரபாகரன் என்பவரின் பெயரும் இணைந்துள்ளது.
விமானத்தில் நடந்த அநாகரிகம்:
கைது: திருவள்ளூர் நகராட்சி திமுக கவுன்சிலரான பிரபாகரன், டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
"தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டோம்" என்பதுதான் திமுக-வின் தேர்தல் கோஷம். ஆனால், அவர்களின் ஒவ்வொரு செயலும் தமிழகத்தைத் சர்வதேச அளவில் தலைகுனிய வைத்துக்கொண்டிருக்கிறது என அண்ணாமலை சாடியுள்ளார்.
English Summary
DMK Actions vs Rhetoric Annamalai Slams Tiruvallur Councillor Harassment Case