6-வது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி - மகிழ்ச்சியில் விவசாயிகள்.!!
veeranam lake sixth time fulled
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் அமைந்துள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாகவும், விவசாய பயன்பாடு மற்றும் உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது.
இந்த ஏரி மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காகவும் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை கடந்த 1-ந்தேதி 5-வது முறையாக எட்டியது.

கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கீழணையில் இருந்து பல்வேறு ஓடைகள், மதகுகள் வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக வீராணம் ஏரி 6-வது முறையாக தனது முழு கொள்ளளவான 47.40 அடியை எட்டியது. வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
veeranam lake sixth time fulled