பாலிவுட் நடிகர் தீரஜ் குமார் மறைவு!
actor deeraj kumar death
பாலிவுட் மற்றும் பஞ்சாபி திரையுலகில் நீண்டகாலம் ஒளிர்ந்த நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் தீரஜ் குமார் (79) இன்று (ஜூலை 15) காலை மும்பையில் காலமானார்.
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஜூன் 12ஆம் தேதி மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், உடல்நிலை மேலும் மோசமடைந்து இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்தார் என அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.
தீரஜ் குமாரின் இறுதிச் சடங்கு ஜூலை 16 அன்று மும்பையின் பவன் ஹான்ஸ் மின் மயானத்தில் நடைபெறும்.
50 ஆண்டுகளுக்கும் மேல் திரைத்துறையில் பணியாற்றிய தீரஜ் குமார், 1974 முதல் 1984 வரை பஞ்சாபி மொழியில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அவரின் திரையுலகப் பயணம் 1965-ல் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.