படப்பிடிப்பில் தளத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு: இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 04 பேர் மீது வழக்கு பதிவு..! - Seithipunal
Seithipunal


நாகை அருகே திரைப்பட படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில், சண்டை பயிற்சியாளர் இறந்தது குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகர் ஆர்யாவை வைத்து ‛வேட்டுவம்' என்ற படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார். ‛அட்டகத்தி' தினேஷ், சோபிதா துலிபாலா, லிஸி ஆண்டனி , கலையரசன், ஷபீர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். காரைக்குடியில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து, நாகை மாவட்டம் விழுந்தமாவடி என்ற ஊரில் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு நேற்று நடந்தது.

நேற்று நாகை மாவட்டம் விழுந்தமாவடி என்ற ஊரில் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம், பூங்கண்டம் பகுதியை சேர்ந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ், 52, என்பவர் காரில் தாவி செல்லும் காட்சி படம் பிடிக்கப்பட்ட போது, எதிர்பாராவிதமாக தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் பா.ரஞ்சித் உள்ளிட்ட 04 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். படப்பிடிப்பின் போது கவனக்குறைவு அல்லது அலட்சியத்தால் ஒரு உயிர் போயுள்ளது. இதன்காரணமாக ப.ரஞ்சித்  உள்ளிட்ட 04 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Case registered against 04 people including director Pa Ranjith in the case of stunt master dies on set during filming


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->