ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி..விநாயகருக்கு 13,108 கடலை உருண்டை அலங்கார பூஜை!
Aani month Sankatahara Chaturthi 13108 peanut balls decoration worship for Vinayagar
திருப்பந்தியூர் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவிலில் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு 13,108 கடலை உருண்டை அலங்கார பூஜை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் திருப்பந்தியூர் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது.இத்திருக்கோவிலில் கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.
இதில் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி மட்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.முதலாம் ஆண்டு 21,000 கொழுக்கட்டை அலங்காரம் இரண்டாம் ஆண்டு 6108 லட்டு அலங்கார தரிசனம் மூன்றாம் ஆண்டு 11 ஆயிரத்து 108 லட்டு அலங்கார தரிசனம் நான்காம் ஆண்டு ஆனி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு செல்வ விநாயகருக்கு 300 கிலோ வெல்லம், 300 கிலோ உடைத்த கடலை ஆகிய பொருட்களை கொண்டு 13,108 கடலை உருண்டையால் அலங்கரிக்கப்பட்டு விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கடலை உருண்டையால் விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டு காட்சியளிப்பதை திருப்பந்தியூர் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வருகை தந்து விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அலங்காரம் செய்யப்பட்ட கடலை உருண்டைகள் பிரித்து கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கு அளிக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.தொடர்ந்து பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை ஸ்ரீ வழித்துணை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Aani month Sankatahara Chaturthi 13108 peanut balls decoration worship for Vinayagar