யாராவது தப்பு பண்ணீங்க.... எச்சரிக்கை விடுத்த செந்தில் பாலாஜி!
dmk senthilbalaji warn sand mafia
கரூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி, “வாங்கல் பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தை (மணல் கொள்ளையை தடுத்த நபர் கொலை) வைத்து சிலர் அடிப்படைத் தரமின்றி அரசியல் செய்து வருகின்றனர்.
அந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர் என்னுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை ஷேர் செய்கின்றனர். ஆனால், அவர் அதிமுகவில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமே அது” என்று விளக்கம் அளித்தார்.
மேலும், “தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் முன்னிலையில் யாருக்கும் சலுகை கிடையாது,” என வலியுறுத்தினார்.
மேலும் 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 5 நிமிடங்களில் மணல் அள்ளலாம்" என்ற அவர் உரையைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றும், “அந்த உரை, மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும், உள்ளூர் பயன்பாட்டிற்கும் உரியது மட்டுமே. லாரி மணல் கொள்ளையைக் குறித்து அல்ல,” என்றும் செந்தில் பாலாஜி விளக்கியுள்ளார்.
English Summary
dmk senthilbalaji warn sand mafia