சேலத்தில் தூத்துக்குடி ரவுடி மதன் வெட்டிக் கொலை – பழிக்கு பழி நடந்த கொலை?!
salem thothukudi rowdy murder
சேலம் அஸ்தம்பட்டியில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி மதன் (28) இன்று காலை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த மதன், 2019ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். அதன் ஒரு பகுதியாக, கடந்த 10ம் தேதி முதல் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வந்தார்.
இன்று மனைவி மோனிஷாவுடன் காவல் நிலையத்தில் கையெழுத்து எழுதி விட்டு அருகிலுள்ள உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, முகம் மூடிய 6 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை அரிவாளால் தாக்கியது. பலத்த காயங்களால் மதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குற்றவாளிகள் இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர்.
இறந்த மதனின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் கைப்பற்றப்பட்டு, நான்கு தனிப்படைகள் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றன.
மதன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், இது பழிவாங்கும் கொலை என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
salem thothukudi rowdy murder