பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் உள்ளிட்ட 04 பேருக்கு கௌரவ ஆஸ்கர் விருது..! - Seithipunal
Seithipunal


மிஷன் இம்பாசிபிள் சீரிஸ் படத்தின் மூலம், உலகளவில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் டாம் க்ரூஸ். 63 வயதான இவர், சண்டை மற்றும் சாகச காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார். அவரது இந்த அர்ப்பணிப்பால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை அவரை கொண்டாடி வருகின்றனர். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் வலம் வருகிறார்.

இந்நிலையில், சினிமாத்துறையில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான டாம் க்ரூஸ், திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக, அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் அமைப்பு, அவருக்கு 'கௌரவ ஆஸ்கர்' விருதை அறிவித்தது.

இதற்கு முன்பாக, டாம் க்ரூஸ்க்கு, 'பார்ன் ஆன் தி போர்த் ஆப் ஜூலை' மற்றும் 'ஜெரி மகுயர்' ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்காகவும், 'மேக்னோலியா' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்காவும், 'டாப் கன் மாவெரிக்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் என 04 முறை ஆஸ்கர் விருதுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த நிகழ்ச்சியில் 'கௌரவ  ஆஸ்கர்' விருதை, டாம் க்ரூஸ் பெற்றுக் கொண்டார். அவருடன் இணைந்து டெபி ஆலன், வின் தாமஸ் மற்றும் டோலி பார்டன் ஆகியோருக்கும் கவுரவ 'கௌரவ  ஆஸ்கர்'வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Honorary Oscar Award to 4 people including famous Hollywood actor Tom Cruise


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->