கமல்–ரஜினி கூட்டணிக்கு புதிய திருப்பம்! ரஜினி படத்தை இயக்க தனுஷிடம் பேச்சுவார்த்தை...!
new twist Kamal Rajini alliance Talks Dhanush direct Rajinis film
கமல்ஹாசன் தலைமையிலான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், ரஜினிகாந்தின் 173வது திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் இந்த படம், கமலின் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் கூட்டணி என்பதால் கோடிக்கணக்கான ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் வெளிவந்த அறிவிப்பில் சுந்தர்.சி இயக்குநராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவர் திட்டத்திலிருந்து விலகியதால், “இந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார்கள்?” என்ற கேள்வி சமூக ஊடகங்களில் சூடுபிடித்தது.மேலும், செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “ரஜினி விரும்பும் கதையே எடுக்கப்படும்” என்று தெளிவுபடுத்தினார்.

மேலும், இந்த முக்கியமான படத்துக்கு புதிய தலைமுறை இயக்குநர்களுக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.இதற்கிடையில், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது,"ரஜினியின் 173வது படத்தை நடிகர்–இயக்குநர் தனுஷ் இயக்கப் போகிறார் என்ற செய்தி வேகமாக பரவி வருகிறது.
இது வெளியாகியவுடன், ரஜினி–தனுஷ் கூட்டணியை பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் உற்சாகம் வானளாவியுள்ளது.பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை போன்ற படங்களை இயக்கி திறமையை நிரூபித்த தனுஷிடம், தற்போது இயக்குநர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்ற தகவலும் லீக்காகியுள்ளது.
English Summary
new twist Kamal Rajini alliance Talks Dhanush direct Rajinis film