வேலூர் தவெக கூட்டம்: "நீதிமன்ற விதிமீறல் நடந்தது" - காவல்துறை அதிரடி அறிக்கை!
Vellore TVK Meet Police Deny Delay Point to Rules Violations
விஜய்யின் வேலூர் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் காவல்துறை முட்டுக்கட்டை போட்டதாக எழுந்த புகாருக்கு, வேலூர் காவல்துறை விரிவான காலவரிசையுடன் (Timeline) விளக்கம் அளித்துள்ளது. "ஒன்றரை மாதப் போராட்டம்" என்ற தவெக-வின் குற்றச்சாட்டைப் போலீஸ் முற்றிலுமாக மறுத்துள்ளது.
உண்மை நிலவரம் என்ன?
தவெக-வின் பின்வாங்கல்: ஜனவரி 28-ல் முதல் மனு அளிக்கப்பட்டது; ஆனால் பிப். 5-ல் தேதி தள்ளிப்போவதாகத் தவெக தரப்பே அந்த மனுவைத் திரும்பப் பெற்றது.
புதிய மனு: பிப். 6-ல் மீண்டும் மனு அளிக்கப்பட்டு, பிப். 18-ல் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 4,900 எனத் திருத்தப்பட்டது.
வேகமான அனுமதி: தவெக தரப்பிலிருந்து பிப். 20-ல்தான் முழுமையான விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அடுத்த 2 நாட்களில் (பிப். 22) கள ஆய்வு முடிந்து அனுமதி வழங்கப்பட்டது.
விதிமீறல் குற்றச்சாட்டு:
காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய மீறல்கள்:
அதிகப்படியான கூட்டம்: 4,900 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சட்ட மீறல்: இது உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசாணை எண் 05-ல் உள்ள விதிமுறைகளை அப்பட்டமாக மீறிய செயலாகும்.
நிர்வாகிகள் "20 மணி நேரத்திற்கு முன்புதான் அனுமதி கிடைத்தது" எனக் கூறியது உண்மைக்குப் புறம்பானது என்றும், நான்கு நாட்களிலேயே உரிய அனுமதி வழங்கப்பட்டதாகவும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
English Summary
Vellore TVK Meet Police Deny Delay Point to Rules Violations