ஜப்பானில் சகுராஜிமா எரிமலை வெடிப்பு: விமான சேவைகள் ரத்து..!
Flight services canceled due to Sakurajima volcano eruption in Japan
ஜப்பான் எரிமலைகள் அதிகம் காணப்படும் நாடாகும். இங்கு எப்போது எரிமலை நெருப்பு பிழம்புகளை உமிழத் தொடங்கும் என்று கணிக்க முடியாது. இந்நிலையில் ககோஷிமா நகரத்தின் அருகில் உள்ள, சகுராஜிமா என்ற எரிமலை 13 மாதங்களாக அமைதியாக இருந்த நிலையில், இப்போது நெருப்பை உமிழத் தொடங்கியுள்ளது.
குறித்த எரிமலை அடுத்தடுத்து 02 முறை நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்ததால் வானில் கிட்டத்தட்ட 4.4 கிலோ மீட்டர் தூரம் புகை மண்டலமாகவும், புழுதியாகவும் காட்சி அளித்தது. இதனால் ஜப்பான் நாட்டின் விமான சேவையை முற்றிலும் பாதித்துள்ளது.

வான்வழி பாதையில் புகை, சாம்பல்கள் நிரம்பி காணப்பட்டதால் ககோஷிமா விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 30க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்களின் வருகை, புறப்பாடுகளும் தாமதமாகி இருக்கின்றன.இதனால் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
இந்த சகுராஜிமா எரிமலை ஜப்பானின் பிரபலமான எரிமலைகலீல் ஒன்றாகும். இது கடந்த 2019-ஆம் ஆண்டு நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்த போது, வானில் 5.5 கிமீ புகை மண்டலமாகவும், தூசுகள் நிரம்பி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Flight services canceled due to Sakurajima volcano eruption in Japan