அண்ணாமலையார் கோவிலில் ஸ்ரீலீலா வருகை! பக்தர்கள் செல்பிக்காக போட்டி...!
Srileelas visit Annamalaiyar temple Devotees compete selfies
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் ஸ்ரீலீலா. 2019ஆம் ஆண்டு வெளியான ‘கிஸ்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான அவர், பின்னர் ‘குர்ச்சி மாடதபெட்டி’, ‘கிஸ்ஸிக்’ போன்ற ஹிட் பாடல்களில் கொடுத்த குத்தாட்டத்தால் இளம் ரசிகர்களை நாட்டம் கொள்ள வைத்தார்.

இப்போது ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து உருவாகும் ‘பராசக்தி’ படத்திலும், ரவி தேஜாவுடன் இணையும் ‘மாஸ் ஜதாரா’ படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில், ஸ்ரீலீலா திருவண்ணாமலையிலுள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் தெய்வ தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் அவரை வரவேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தது. பின்னர் கோவிலிலிருந்து வெளியே வந்த நடிகையை பார்த்த பக்தர்கள், ஆர்வத்துடன் அணுகி செல்ஃபி எடுத்து மகிழ்ந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது.
English Summary
Srileelas visit Annamalaiyar temple Devotees compete selfies