ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மீண்டும் தலைமை பயிற்சியாளராகும் குமார் சங்ககார..!
Kumar Sangakkara returns as head coach of Rajasthan Royals
ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியில் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககார நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான குமார் சங்ககார, கடந்த 2023 முதல் 2024 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார்.
பின்னர் கடந்த சீசனில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அப்போது ராகுல் டிராவிட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார். தற்போது அந்த பொறுப்பில் இருந்து அவர் விலகியுள்ளார்.

இந்நிலையில், ஐபிஎல் 2026-ஆம் ஆண்டு சீசனின் பயிற்சியாளராக குமார் சங்ககார மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், பயிற்சியாளர் குழுவிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சீசனில் மோசமாக ஆடியதால், 09-ஆம் இடத்தில் ராஜஸ்தான் அணி தள்ளப்பட்டு வெளியேறியது.
இதையடுத்து அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை, சிஎஸ்கே டிரேட் செய்துள்ளது. அதேநேரத்தில் ஜடேஜா மற்றும் சாம் கரனை சிஎஸ்கே அணியில் இருந்து ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது. வரும் சீசனை முன்னிட்டு அடுத்து மாதம் நடைபெற உள்ள ஏலத்தில் தங்களுக்கு வேண்டிய வீரர்களை தேர்வு செய்து, அணியை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Kumar Sangakkara returns as head coach of Rajasthan Royals