முனைவர் பட்டம் பெற்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி: "என் நண்பனின் இடத்தில் இருந்து பெருமையுடன் மகிழ்கிறேன்'' என முதல்வர் வாழ்த்து..!
The Chief Minister congratulates Minister Anbil Mahesh on receiving his doctorate
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 'முனைவர் பட்டம் பெற்றுள்ள தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வாழ்த்துகள்'. என தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் Physical activities for skill development among school children using machine learning-ல் தனது ஆய்வை நிறைவு செய்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
''முனைவர்''பட்டம் பெற்றுள்ள அன்பில் மகேஷை வாழ்த்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளமான X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"When leaders learn, generations dream bigger! என் நண்பனின் இடத்தில் இருந்து பெருமையுடன் மகிழ்கிறேன்! "முனைவர்" பட்டம் பெற்றுள்ள தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வாழ்த்துகள்!
கல்வியே நமது உயர்வுக்கான வழி; அதிலும் ஆராய்ச்சிப் படிப்பு வரை நமது தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும் என்ற எனது சொல்லை, எனது அமைச்சரவையிலும் - குடும்பத்திலும் இருந்து கடைப்பிடித்திருக்கிறார் அன்பில் மகேஸ்.
மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் - மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றிக் கொண்டே முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர், பணிச்சுமை - நேரமின்மை - வயது ஆகியவற்றைக் கடந்து கல்விபெறத் துடிக்கும் அனைவருக்கும் 'Role Model' ஆகிவிட்டார்..!'' என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
The Chief Minister congratulates Minister Anbil Mahesh on receiving his doctorate