மேற்கு வங்கத்தில் SIR பணிககளால் கிடைத்த பலன்: வங்கதேச ஊடுருவல்காரர்கள் சொந்த நாட்டுக்கு தப்பியோட்டம்..!
Bangladeshi infiltrators flee to their own country due to SIR agencies in West Bengal
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த திருத்த பணிகள் காரணமாக மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக குடியிருந்த வங்கதேசத்தினர் சொந்த நாட்டுக்குச் ஓடிச் செல்லும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் முக்கிய நோக்கமே, ஒருவரே பல இடங்களில் ஓட்டு போடுவதை தடுப்பதோடு, உண்மையான வாக்காளர்கள் யார் என்பதை அடையாளம் காணுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது.
பீஹாரைத் தொடர்ந்து தற்போது கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் என மொத்தம் 10 மாநிலங்களிலும், கோவா, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மத்திய அரசு மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இன்று அசாமிலும் எஸ்ஐஆர் பணிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந் நிலையில், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகள் தொடங்கியதற்கு பின்னர்அங்கு வீடு, வீடாக எஸ்ஐஆர் கணக்கீட்டு விண்ணப்ப படிவங்களை வினியோகித்து, பூர்த்தி செய்து அவற்றை திரும்ப பெறும் பணிகளில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக, அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் சட்ட விரோதமாக ஊருடுவி உள்ள ஏராளமானோர் தற்போது சொந்த நாடு நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் இருந்து இவர்கள் குடும்பம், குடும்பமாக அவர்கள் உடமைகளுடன், வங்கதேசத்திற்கு செல்லும் காட்சிகளை பிரபல ஆங்கில செய்தித் தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ளது.
SIR தொடர்பில் இன்று விவாத மேடை நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய ரிபப்ளிக் செய்தி தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, எஸ்ஐஆர் நடவடிக்கையால் மக்களின் ஓட்டுரிமை காக்கப்படுகிறது என்பதை கள ஆய்வில் கண்டறிந்ததாக கூறியுள்ளார்.

அத்துடன், அதை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தங்கள் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் பதிவு செய்த பேட்டிகளை வெளியிட்டார்.
அதில், சட்ட விரோதமாக கோல்கட்டாவில் தங்கி இருந்து, தற்போது எஸ்ஐஆரால் சிக்கிக் கொள்வோம் என்பதால் பயந்து, சொந்த நாடான வங்கதேசத்திற்கு நூற்றுக்கணக்கானோர் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் மூட்டை முடிச்சுகளுடன் புறப்படுவதை அறிந்து ரிபப்ளிக் செய்தியாளர் பிரத்யேகமாக பேட்டி எடுத்துள்ளார்.
அதில் வங்கதேசத்திற்கு திரும்பிச்செல்லும் நபர்கள் கூறியதாவது;

நாங்கள் வங்கதேசத்தில் இருந்து கோல்கட்டாவில் சட்ட விரோதமாக ஊடுருவினோம். எங்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. நாங்கள் இங்கு பாஸ்போர்ட் எடுத்து முறைப்படி வரவில்லை. புரோக்கர் மூலமாக 05 ஆயிரம் ரூபாய் முதல் 07 ஆயிரம் வரை பணம் கொடுத்து வந்தோம் என்று கூறியுள்ளனர்.
அத்துடன், 02 ஆண்டுகளாக இங்கே இருக்கிறோம். (மேற்கு வங்கம்) எஸ்ஐஆர் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள். எங்களிடம் எந்த முறையான குடியுரிமையோ ஆவணங்களோ இல்லை.
ஆகையால் சொந்த நாட்டுக்குச் செல்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
எங்களுக்கு இங்கே உள்ள அரசாங்கம் உதவி புரிகிறதாகவும், எல்லைகளை திறந்துவிட்டுள்ளதாகவும், பாதுகாப்பாக செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், கைவசம் உள்ள இந்திய பணத்தை செலவிடுவோம். வேறு என்ன செய்வது? என்று அந்த பேட்டியில் உரையாடல்களில் பதிவாகியுள்ளது.
English Summary
Bangladeshi infiltrators flee to their own country due to SIR agencies in West Bengal