உக்ரைனின் முக்கிய பாதுகாப்பு கூட்டாளியான பிரான்சிடம் இருந்து 100 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்து..!
Ukraine signs deal to buy 100 Rafale jets from France
பிரான்சிடமிருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைன் கையெழுத்திட்டு உள்ளதாக அந்நாட்டின் தூதரகம் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடங்கியதில் இருந்து, தற்போது வரை ஜெலன்ஸ்கி 09 முறை பிரான்ஸ் சென்றுள்ளார். ரஷ்யா தொடர்ந்து உக்ரைனின் எண்ணெய் நிறுவனங்களின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. குறித்த ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைனின் பாதுகாப்பை பலப்படுத்த ஜெலன்ஸ்கி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்கள் உள்பட ராணுவ உபகரணங்கள் வாங்க உக்ரைன், பிரான்ஸ் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
உக்ரைனுக்கு,பிரான்ஸ் ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளியாக உருவெடுத்து வருகிறது. அதன்படி, ரபேல் போர் விமானங்கள் மற்றும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை கையகப்படுத்துவது, வரும் மாதங்களில் ரஷ்ய தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறனை கணிசமாக வலுப்படுத்தும் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Ukraine signs deal to buy 100 Rafale jets from France