"தோல்வி பயத்தால் பதட்டத்தில் ஸ்டாலின்" - நயினார் நாகேந்திரன் தாக்கு!
BJP Nayinar Condemn to DMK mk stalin
முதல்வர் ஸ்டாலின் கூறிய "படி படி என்கிறது திராவிட மாடல், படிக்காதே என்கிறது காவி கும்பல்" என்ற வார்த்தையை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக கண்டித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கையில், "ஸ்டாலினுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. 'ஓரணியில் திரள்வோம்' என்கிறார். இப்போது ஏன் அந்த அவசரம்?
பிரதமர் மோடி கல்விக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அமித் ஷா சென்னை வந்த நாளிலிருந்து திமுக குழப்பத்தில் இருக்கிறது. அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் எண்ணத்தில் அவர்கள் பதட்டத்தையும், தோல்வி பயத்தையும் வெளிப்படுத்துகிறார்கள்” என்றார்.
மேலும், “இதே காவி அணியுடன் தான் மு.க. ஸ்டாலின் தந்தை இருந்தார். பாஜகவுடன் இவர்கள் கூட்டணி வைத்தபோது சங்கிகள் இல்லையா? தற்போது மட்டும் சங்கிகள் என்று சொல்வது இரட்டைமுகம்.
அதிமுக பாஜகவிடம் அடகு வைத்துள்ளதாக கூறுகிறார்கள். அப்படி என்றால் திமுகவுடன் இருக்கும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் யாரிடம் அடகு வைத்துள்ளனர்?
‘பாஜக அதிமுகவை விழுங்குகிறது’ என்று கூறுவதை விட, தங்களது தோல்வியை மறைக்க இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்துகிறார்கள்.
திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என கனவு காணலாம், ஆனால் பாஜக தலைமையில் 234 இடங்களிலும் வெற்றி பெறுவோம்” என நாகேந்திரன் தெரிவித்தார்.
English Summary
BJP Nayinar Condemn to DMK mk stalin