அனுஷ்காவின் 'காதி' படத்துக்கு தணிக்கை வாரியம் கொடுத்த சான்றிதழ் என்ன தெரியுமா?
Do you know what certificate censor board gave Anushkas film ghaati
தென்னிந்தியா திரையுலகில் பல வெற்றிப் படங்களை கொடுத்து கொடிகட்டி பறப்பவர் 'நடிகை அனுஷ்கா ஷெட்டி'. இவரின் திரையுலக வாழ்க்கையில் 'பாகுபலி' முக்கிய படமாக அமைந்தது.
மேலும், இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற திரைப்படம்.தற்போது கதாநாயகியாக ‘காதி’ படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் இதயங்களை ஈர்க்க வந்துள்ளார். இந்த படம் பாக்ஸ் ஆபீஸை நிச்சயம் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.இப்படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக 'விக்ரம் பிரபு' நடித்துள்ளார். இப்படம் போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருப்பதாக தெரிகிறது.
மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.இது வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழை கொடுத்துள்ளது.
English Summary
Do you know what certificate censor board gave Anushkas film ghaati